×

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 3 பாடங்களில் 100 மதிப்பெண் பெற்று மாணவி சாதனை

மயிலாடுதுறை,மே 7: மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்.2 பொதுத்தேர்வில் 92.38 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வணிகவியல் துறை மாணவி மூன்று பாடங்களில் 100% மதிப்பெண்கள் பெற்று 595 மார்க்குகள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றார். பிளஸ்.2 பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 90.15 சதவீதமாகும். இந்த ஆண்டு 92.38% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.23 சதவீதம் அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. வணிகவியல் துறை மாணவி சாய்கண்ணமை 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழ் -99, ஆங்கிலம் 98, பொருளாதாரம் 100, வணிகவியல் 100, கணக்கு பதிவியியல் 98, கணினி பயன்பாடுகள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆடிட்டர் ஆவதே லட்சியம் என்று மாணவி தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதானம் அரசு ஆதிதிராவிடர் நலன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசு பள்ளிகள் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 3 பாடங்களில் 100 மதிப்பெண் பெற்று மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...